9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் இடம் பெறும்: அமைச்சர் அறிவிப்பு!

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் இடம் பெறும்: அமைச்சர் அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்து இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாடம் இடம் பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எழுப்பியக் கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துப் பேசுகையில், ‘’தன்னுடைய 13 வயதில் போர்பரணிப் பாடி தனது 86 வயதில், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்து இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாடம் இடம் பெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை இலவசக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத் திமுக அரசு சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகம் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கும் பெண் கல்வி இடைநிற்றல் இருக்கக்கூடாது என்பதற்காகதான் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக 29% பெண் கல்வி இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பயிலும் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டிக் கொடுப்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in