கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி!

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தமிழக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்திற்கு தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டது.

இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பொதுமக்கள் கருத்து கேட்பு உட்பட பல நிபந்தனைகளை விதித்ததோடு பேனா நினைவுச் சின்னத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளதோடு, 4 ஆண்டுகளுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in