செஸ் விளையாட்டுக் கள உருவில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்!

செஸ் விளையாட்டுக் கள உருவில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செஸ் விளையாட்டுக் கள உருவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 190 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவை பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செஸ் விளையாட்டுப் போட்டியை மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விளம்பரங்களை செய்து வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும் செஸ் போட்டி குறித்து விளம்பர வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவினையொட்டி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடம் செஸ் விளையாட்டுக் கள உருவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்துக்கு வருபவர்கள் இந்த அழகுமிகு காட்சியை பார்த்து பிரமித்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in