630 மில்லி தங்கத்தில் கருணாநிதி உருவம்- அசத்திய சிதம்பரம் பொற்கொல்லர்

முத்துக்குமரன் செய்திருக்கும் கருணாநிதியின் உருவம்
முத்துக்குமரன் செய்திருக்கும் கருணாநிதியின் உருவம்

சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் என்பவர் 630 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவத்தை வடித்திருக்கிறார்.

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் செய்யும் தொழில் செய்து வருபவர் பொற்கொல்லர் முத்துக்குமரன் ( 41 ). இவர் குறைந்த அளவு தங்கத்தைக் கொண்டு பல்வேறு புகழ்பெற்ற கட்டிடங்கள், உருவங்களை வடிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்திய நாடாளுமன்றம் தமிழக சட்டப்பேரவை, சிதம்பரம் நடராஜர் கோயில் , தாஜ்மஹால் உள்பட பலவற்றை வடிவமைத்திருக்கிறார்.

இந்நிலையில் நாளை (ஜூன் 3-ம் தேதி) மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அந்த மூத்த தலைவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரின் உருவத்தை குறைந்த அளவு தங்கத்தை கொண்டு தயாரிக்க திட்டமிட்டார். மொத்தம் 729 மில்லி தங்கத்தைக் கொண்டு இந்த பணிகளை தொடங்கினார். மூன்று சென்டிமீட்டர் உயரம், மூன்று சென்டிமீட்டர் அகலம் கொண்ட கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்துள்ளார்.

99 மில்லியில் செய்யப்பட்டிருக்கும் கலைஞர் பெயர்
99 மில்லியில் செய்யப்பட்டிருக்கும் கலைஞர் பெயர்

இதில் 630 மில்லி தங்கம் மட்டுமே கருணாநிதியின் உருவத்தை செய்ய பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள 99 மில்லி தங்கத்தில் கலைஞர் என்ற பெயரை கருப்பு, சிவப்பு வண்ணத்தில் செய்துள்ளார். முத்துக்குமரன் இந்த முயற்சியை திமுகவினர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in