கருணாநிதியின் நினைவுநாள்: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி மரியாதை!

கருணாநிதியின் படத்துக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி மரியாதை
கருணாநிதியின் படத்துக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இன்று காலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

கருணாநிதியின் படத்துக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி மரியாதை
கருணாநிதியின் படத்துக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி மரியாதை

இந்நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியில் உருவப்படத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வின்போது திமுக எம்.பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களும் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in