'கலைஞர் 100'... திரைத்துறையினரின் கருணாநிதி நூற்றாண்டு விழாவும் தள்ளிவைப்பு!

கருணாநிதி
கருணாநிதி

சென்னையில் திரைத்துறையின் சார்பில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெற இருந்த கலைஞர் 100  நூற்றாண்டு விழாவும் மழை வெள்ள பாதிப்புகளை அடுத்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் திரைத் துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து ’கலைஞர் 100’ என்ற பெயரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிசம்பர் 24- ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக அனைத்து முன்னணி திரைப்பட  நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது.  இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  

இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலை கழகங்களிலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி சார்பில் 17-ம் தேதி சேலத்தில்  நடைபெற இருந்த இளைஞர் அணி மாநில மாநாடும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து திரையுலகம் சார்பில் நடைபெற இருந்த ‘கலைஞர் 100’ நூற்றாண்டு விழாவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  'தமிழக முதல்வரும், அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழு முச்சாக ஈடுபட்டுள்ளார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in