கார்த்தி சிதம்பரத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு: தனியார் மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை!

கார்த்தி சிதம்பரத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு: தனியார் மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை!

திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.

முறைகேடாகச் சீனர்களுக்கு விசா வழங்கியதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான பத்து இடங்களில் கடந்த மே மாதம் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ப.சிதம்பரம் ராஜஸ்தான் மாநிலத்திலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருந்தனர். இந்நிலையில் லண்டனிலிருந்து வந்த கார்த்தி சிதம்பரத்துடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மத்திய அரசிற்கு எதிராக அவர் போராட்டங்களும் நடத்தி வந்தார். பரபரப்பான அரசியலில் இயங்கிக் கொண்டிருந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்திற்குக் காய்ச்சல் அதிகம் இருந்த காரணத்தால் நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு உடற் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் அவருக்குச் சாதாரண காய்ச்சல்தான் ஏற்பட்டிருக்கிறது எனவும் மருத்துவமனை சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா காரணமாக அரசியல் தலைவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் உடல்நிலை குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in