கழிப்பறையிலேயே உயிர் பிரிந்தது; மாரடைப்பால் அமைச்சர் திடீர் மரணம்: முதல்வர் அதிர்ச்சி

கழிப்பறையிலேயே உயிர் பிரிந்தது; மாரடைப்பால் அமைச்சர் திடீர் மரணம்: முதல்வர் அதிர்ச்சி

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61. அவரது மறைவு மாநில முதல்வரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹூக்கேரி சட்டசபை தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமேஷ் கட்டி, வனத்துறை மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பதவி வகித்தார். நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உமேஷ், பெங்களூரு டாலர்ஸ் காலனி வீட்டுக்கு இரவு 10.30 மணிக்கு வந்தார். இரவு உணவுக்குப் பின், கழிப்பறைக்குக் சென்ற அவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. இதனால், சமையல்காரர் கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சமையல்காரர், கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, அமைச்சர் உமேஷ் கட்டி கீழே விழுந்து கிடந்தார்.

இதையடுத்து, அமைச்சர் உமேஷ் கட்டி உடனடியாக அருகில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். அமைச்சரின் திடீர் மரணம் முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in