பெண்ணுக்கு கன்னத்தில் பளார்: மன்னிப்பு கேட்ட அமைச்சர் சொல்வது என்ன?

பெண்ணுக்கு கன்னத்தில் பளார்: மன்னிப்பு கேட்ட அமைச்சர் சொல்வது என்ன?

பெண்ணின் கன்னத்தில் கர்நாடகா வீட்டு வசதி துறை அமைச்சர் சோமனா அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரின் ஹாங்காலா கிராம பஞ்சாயத்து சார்பில் நேற்று முன்தினம் 173 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடந்தது. இதில், வீட்டு வசதி துறை அமைச்சர் சோமனா, பயனாளிகளுக்கு வீட்டு மனைக்கான சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, மேடையில் ஏறிய கெம்பம்மா என்ற பெண், 'பயனாளிகள் முறையாக தேர்வு செய்யப்படுவதில்லை. 'நிலம் வைத்திருப்போருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பிரமுகர் நஞ்சப்பா சொல்லும் நபர்களுக்கே நிலம் கொடுக்கப்பட்டுள்ளது' எனக் கூறிவிட்டு சோமனாவின் காலில் விழுந்தார்.

இதைக் கேட்ட அமைச்சர், சற்றும் எதிர்பாராத வகையில் அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அமைச்சரின் செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய செயலுக்கு அமைச்சர் சோமனா மன்னிப்பு கேட்டுள்ளார். "பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நானும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தவன். அந்த பெண்ணிடம் கையை நீட்டி வரிசையில் நிற்குமாறு கூறினேன். வேறு எந்த நோக்கமும் இல்லை" என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே, "என்னை அமைச்சர் அவரது கையால் அறையவில்லை" என்று பாதிக்கப்பட்ட பெண் பேசும் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in