
காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு தற்போது தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை என்று கர்நாடகா அரசு சார்பில் முற்றிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு விளக்கங்களையும் கேட்டபின்னர் காவிரி ஒழுங்காற்றுக் குழு, வரும் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 15 நாட்களுக்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!