ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம்! இஸ்லாமிய மாணவிகளுக்கு கர்நாடக அரசு அனுமதி!

ஹிஜாப்
ஹிஜாப்
Updated on
1 min read

கர்நாடக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து எழுத அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்

கர்நாடக அமைச்சர் சுதாகர்
கர்நாடக அமைச்சர் சுதாகர்

கர்நாடகாவில்  கடந்த 2022ம் ஆண்டு, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளிகளில் மத அடையாள அணிகளை அணிந்து வர தடை விதித்தது.

இந்தத் தீர்ப்பால் முஸ்லிம் மாணவிகள், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஹிஜாப் அணிந்து எழுத முடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் சுதாகர், "தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் தங்களின் தனிப்பட்ட உடைகளை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in