தமிழகத்திற்குச் செயற்கையான நெருக்கடியை உருவாக்கும் கர்நாடகா அரசு... முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

கர்நாடகா அணைகளில் போதுமான தண்ணீர் இருந்த போதிலும் தமிழகத்திற்கு செயற்கையான நெருக்கடியை கர்நாடகா அரசு உருவாக்கியுள்ளது என்றும் காவிரி உரிமை மீட்பில் திமுக அரசு உறுதியாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைக் கூட்டம்
சட்டப் பேரவைக் கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர், ‘’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை இந்த பேரவைக்கு கொண்டு வந்துள்ளேன். காவிரி உரிமையைக் காப்பதில் திமுக எந்த சூழலில்லும் உறுதியாக இருக்கும்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மேட்டூர் அணை சீராக திறந்துவிடப்படுகிறது. ஆனால், தமிழகத்திற்கு செயற்கையான நெருக்கடியை கர்நாடகா அரசு உருவாக்கியுள்ளது. இந்த மாதத்தில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக திறந்து விடவில்லை. இதன் காரணமாக மத்திய அமைச்சரை சந்தித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இருமுறை வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா அரசு மதிக்கவில்லை. தமிழக அரசின் தொடர் முயற்சிகளால் காவிரி மேலாண்மை வாரியம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால் அதனையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கும். தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடுவோ. குறுவை மற்றும் சம்பா பயிர்களை காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதால் காவிரி நீரை பெற்றுத் தருவோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in