130 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை; பாஜகவுக்கு கடும் பின்னடைவு: தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரம் இதோ...!

மோடி ராகுல்காந்தி குமாரசாமி
மோடி ராகுல்காந்தி குமாரசாமிகர்நாடக தேர்தல் முடிவுகள் நிலவரம்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரம் இதோ...!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பான இடங்களை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி, 130 தொகுதிகளில் காங்கிரஸூம், 66 தொகுதிகளில் பாஜகவும், 22 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும், சுயேட்சையில் 4 தொகுதிகளிலும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா மற்றும் சர்வோதய கர்நாடகா பக்சா ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன. கர்நாடகாவில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும். காங்கிரஸ் தற்போதைய நிலவரப்படி 129 இடங்களில் முன்னிலை வகிப்பதால் அக்கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டடனர். இதில் 184 பெண்களும், ஒரு திருநங்கையும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in