கர்நாடக டிஜிபி பயனற்றவர்; அவரை கைது செய்யவேண்டும்: காங்கிரஸ் தலைவர் காட்டம்

டிகே சிவக்குமார்
டிகே சிவக்குமார்கர்நாடக டிஜிபி பயனற்றவர்; அவரை கைது செய்யவேண்டும்: காங்கிரஸ் தலைவர் காட்டம்

கர்நாடக மாநில டிஜி மற்றும் ஐஜிபி பிரவீன் சூட்டை பயனற்றவர் என்றும், அவர் ஆளும் கட்சியான பாஜகவின் ஏஜென்ட் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காவல்துறை டிஜிபி பிரவீன் சூட் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார். அவர், “ இந்த டிஜிபி ஒரு பயனற்றவர், நமது ஆட்சி வரட்டும். அவர் மீது நடவடிக்கை எடுப்போம். அவரை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. பிரவீன் சூட் மரியாதைக்குரியவர் என்று நினைத்தேன். உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "டிஜிபி மூன்றாண்டுகள் பணியை முடித்துவிட்டார். இன்னும் எத்தனை நாட்கள் அவரை வைத்து வணங்க வேண்டும்? அவர் காங்கிரஸ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்கிறார். எங்கள் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளார். பாஜக தலைவர்கள் மீது ஒரு வழக்கு கூட போடவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர் மீது நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த அரசைக் காக்க நெறிமுறையற்ற முறையில் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். வரும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். எங்கள் கட்சியால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in