கர்நாடகா காங்கிரஸ் செயல் தலைவர் திடீர் மரணம்

ஆர்.துருவ நாராயணா
ஆர்.துருவ நாராயணா

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஆர்.துருவ நாராயணா இன்று காலை மரணமடைந்தார்.

61 வயதாகும் துருவநாராயணாவுக்கு இன்று அதிகாலை திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனது கார் ஓட்டு நரை அழைத்த துருவ நாராயணா அருகிலிருந்து டிஆர்எம்எஸ் மருத்துவனைக்கு விரைந்தனர். அங்கு அவசர மருத்துவ உதவிகள் பலனளிக்காது துருவ நாராயணன் இறந்தார். இதனை மருத்துவர் மஞ்சுநாத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்தார்.

கர்நாடக மாநில காங்கிரஸின் 4 செயல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் துருவ நாராயணா.எதிர்வரும் மே மாதம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அதற்கான பணிகளில் கட்சியினரோடு துருவ நாராயணாவும் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளார். மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர், துருவ நாராயணா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in