
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தங்கள் தலைவர்களுக்கு சீட் வழங்கக் கோரி பெங்களூரு கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 25-ம் தேதி காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், அடுத்த கட்ட வேட்பாளர்களுக்கான இரண்டாம் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தங்களின் தலைவருக்கு சீட் வேண்டும் என்று சாரைசாரையாக காங்கிரஸ் தொண்டர்கள் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதில் பலரின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் கடந்த மார்ச் 25ம் தேதி 124 வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. விரைவில், மீதமுள்ள 100 வேட்பாளர்களுக்கான பட்டியலும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், தங்கள் கட்சி வெற்றி பெறும் சூழலில் இருப்பதால், அனைவரும் சீட்டுக்காக போட்டியிடுகின்றனர் என்றும், கட்சி தலைமையின் முடிவின் படியும், தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் முடிவின் படியும், தகுதியான நபர்களுக்கு சீட் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.