டிகே சிவக்குமார்
டிகே சிவக்குமார்கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு இவ்வளவு சொத்தா? - வேட்புமனுவில் வெளியான விவரம்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு இவ்வளவு சொத்தா? - வேட்புமனுவில் வெளியான விவரம்

கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார், கனகபுரா தொகுதியில் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.1214 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

2018ம் ஆண்டில், டிகே சிவக்குமார் தனது மனைவி உஷா சிவக்குமாருக்குச் சொந்தமான சொத்துக்களையும் சேர்த்து ரூ.730 கோடியை அறிவித்திருந்தார். 2018 ம் ஆண்டிலிருந்து டி.கே. சிவக்குமாரின் சொத்துக்கள் குறைந்தது 60% அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான அசையும் சொத்துக்கள் 2018ல் ரூ.70 கோடியிலிருந்து இந்த ஆண்டு ரூ.244 கோடியாக உயர்ந்துள்ளது. உஷாவுக்கு ரூ.153 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேபிசிசி தலைவரின் மொத்த கடன் ரூ.226 கோடியாக உள்ளது.

டி.கே.சிவகுமாருக்குச் சொந்தமான அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு 2018ல் ரூ. 548 கோடியிலிருந்து ரூ. 979 கோடியாகவும், உஷா சிவக்குமாரின் சொத்து ரூ.86 கோடியில் இருந்து ரூ.113 கோடியாகவும் உயர்ந்துள்ளது. அவர் தனது மூன்று குழந்தைகளான ஆபரணா, ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் சொத்துகளையும் அறிவித்தார். ஆபரணாவுக்கும், ஆகாஷுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகள் இல்லை என்றாலும், ஐஸ்வர்யாவுக்கு ரூ.59 கோடி சொத்து இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

சிவக்குமார் மீது மொத்தம் 19 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் பத்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டங்கள் தொடர்பான வழக்குகள், 4 வருமான வரி ஏய்ப்பு வழக்குகள், பணமோசடி சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மற்றும் ஒரு வழக்குகள் உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in