காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி... கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு!

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்.பிக்கு வரவேற்பு
காங்கிரஸில் இணைந்த பாஜக எம்.பிக்கு வரவேற்பு

பாஜக எம்.பி-யாக உள்ள கரடி சங்கண்ணா அக்கட்சியில் இருந்து விலகி  காங்கிரஸ் கட்சியில்  இணைந்துள்ளது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரடி சங்கண்ணா
கரடி சங்கண்ணா

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொப்பல் தொகுதியில் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற  கரடி சங்கண்ணா 10 ஆண்டுகளாக எம்.பி-யாக பணிபுரிந்து வருகிறார். இந்த முறையும் கொப்பல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட  அவர் சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து கோபமடைந்த அவர் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.  காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநில தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் நேற்று இணைந்தார்.

கரடி சங்கண்ணா
கரடி சங்கண்ணா

பாஜக மேலவை உறுப்பினரும், மூத்த தலைவருமான தேஜஸ்வினி கெளடா, அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த மார்ச் 30-ம் தேதி இணைந்தார். இந்த நிலையில் தற்போது கரடி சங்கண்ணாவும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில் பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்கள் காங்கிரஸுக்கு தாவுவது தங்கள் கட்சிக்கு மேலும் பலம் கூட்டும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் சீட் கிடைக்காதவர்கள் அடுத்த கட்சிக்கு தாவுவது மிகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பாஜகவில் இருந்து காங்கிரசுக்கும், காங்கிரசிலிருந்து பாஜகவுக்கும் அதிகம் பேர் கட்சி மாறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in