கர்நாடகா பாஜக கூட்டணிக்கு நேரம் சரியில்லை... பாஜக நிர்வாகி பாலியல் வழக்கில் கைது!

கர்நாடகா மாநில பாஜக நிர்வாகி தேவராஜே கெளடா
கர்நாடகா மாநில பாஜக நிர்வாகி தேவராஜே கெளடா

பிரஜ்வல் விவகாரத்தில் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பதாக கூறிய பாஜக தலைவர் தேவராஜே கௌடா, பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக அவரது நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியானதால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன், ரேவண்ணா
மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன், ரேவண்ணா

இதனிடையே பிரஜ்வல் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறி, பிரஜ்வலின் தந்தை எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக மாநில போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது ஜெர்மனி நாட்டில் பிரஜ்வல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் சிறப்பு தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநில பாஜக நிர்வாகி தேவராஜே கெளடா
கர்நாடகா மாநில பாஜக நிர்வாகி தேவராஜே கெளடா

இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதியே, பிரஜ்வல் மீதான ஏராளமான ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கக் கூடாது எனவும் பாஜக மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான தேவராஜே கவுடா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

பிரஜ்வல் விவகாரம் வெளிவந்த போது தன்னிடம் அவரது ஏராளமான வீடியோக்கள் இருப்பதாக அவர் ஊடகங்களில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், வழக்கு ஒன்றிற்காக தேவராஜே கவுடாவை சந்தித்தபோது, தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தேவராஜே கவுடாவை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு போலீஸார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை கர்நாடகாவின் சித்திரதுர்கா மாவட்டத்தில் விசாரணைக்காக ஆஜரான தேவராஜேவை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in