பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை: பாஜகவுக்கு சறுக்கல்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி காங்கிரஸுக்கா? பாஜகவுக்கா?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி முன்னிலை வகித்து வந்தது. அதற்கு பின்பு தொடர்ந்து பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 118 தொகுதிகளில் காங்கிரஸூம், 80 தொகுதிகளில் பாஜகவும், 23 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன. பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என்று கூறிய நிலையில், அதையே தேர்தல் முடிவுகளும் பிரதிபலிக்கின்றன. கர்நாடகாவில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டடனர். இதில் 184 பெண்களும், ஒரு திருநங்கையும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 144 போடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in