கர்நாடகாவில் பாஜக முன்னிலை: கடும் அதிர்ச்சியில் காங்கிரஸ்!

பாஜக காங்கிரஸ்
பாஜக காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்ற நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 101 தொகுதிகளில் பாஜகவும், 93 தொகுதிகளில் காங்கிரஸும், 13 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன. பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என்று கூறிய நிலையில், தற்போது பாஜக முன்னிலை வகிக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டடனர். இதில் 184 பெண்களும், ஒரு திருநங்கையும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 144 போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்பது இன்று மதியத்துக்குள் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in