‘உதயநிதியின் கலைப் பணியும் மக்கள் பணியும் சிறக்கட்டும்!’

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கனிமொழி
‘உதயநிதியின் கலைப் பணியும் மக்கள் பணியும் சிறக்கட்டும்!’

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 45-வது பிறந்தநாள்.  இதனை திமுக தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் தங்கையும்,  திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி, உதயநிதியின் பிறந்தநாளுக்கு  வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்துள்ளார். அதில் 'கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணியும் கலைப் பணியும் சிறந்திட வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in