விஏஓ உடலுக்கு கனிமொழி, அமைச்சர் நேரில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல்

குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்
குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்விஏஓ உடலுக்கு கனிமொழி, அமைச்சர் நேரில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல்

படுகொலை செய்யப்பட்ட முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் உடலுக்கு திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்த லூர்து பிரான்சிஸ் (53) என்பவர் நேற்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராமசுப்பு என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், மற்றொருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராமசுப்பு மீது கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில் கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு அவரை படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதிஉதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள லூர்து பிரான்சி்ஸ் உடலுக்கு திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். மணற்கொள்ளையைத் தடுப்பதற்காகச் சமரசமின்றி துணிச்சலுடன் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட உத்தரவிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இயற்கை வளங்களை அழித்திடும் மணற்கொள்ளை போன்ற சீர்கேடுகளை உடனடியாக தடுத்திடவேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in