கருணாநிதியின் நினைவிடத்தில் இருமுறை அஞ்சலி: கனிமொழி உருக்கம்!

கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி அஞ்சலி (கோப்பு படம்)
கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி அஞ்சலி (கோப்பு படம்)

தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்தில் காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களுடன் சென்று அஞ்சலி செலுத்திய கனிமொழி எம்.பி, மாலையில் மீண்டும் தனது தாயார் ராசாத்தி அம்மாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று காலையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அங்கிருந்து மௌன ஊர்வலமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணியாகச் சென்ற திமுகவினர் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் சென்று அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் மகளும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் அப்போது உடன் சென்றார். அண்ணன் ஸ்டாலினுடன் அருகிலேயே இருந்து அவரும் தந்தையின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் மீண்டும் மாலை நான்கு மணி அளவில் தனது தாய் ராசாத்தி அம்மாளை அழைத்துக்கொண்டு கருணாநிதியின் நினைவிடத்திற்கு கனிமொழி வந்தார். அப்போது ராசாத்தி அம்மாள் தனது கணவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பாசமான தனது தந்தைக்கு மாறாத அன்புடன் அண்ணனுடன் ஒருமுறை, அம்மாவுடன் மறுமுறை என இன்றைய தினம் இரண்டு முறை வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார் கனிமொழி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in