ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு... கனிமொழி எம்.பி கண்டனம்!

கனிமொழி
கனிமொழி

ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது, இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்பி கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றும், பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார், இதன் பிண்ணனி குறித்து விசாரிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றும் ந, ச்சயமாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in