பாஜக மக்களைத் தொடர்ந்து பிரித்தாளுகிறது... கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி
பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி

பாஜக தொடர்ந்து மக்களைப் பிரித்தாளுகிறது என்று திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறினார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நேற்று நடைபெற்றது. அதில் கனிமொழி எம்.பி பங்கேற்று பேசினார்.

அப்போது, "பாஜக தொடர்ந்து மக்களைப் பிரித்தாளுகிறது. இந்துகளை, இந்து மதத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறுகின்றனர்; ஆனால் அவர்களை அரசியல் கேடயமாகவும், அரசியலுக்கான ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று பேசினார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் உடன்குடியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி வெல்வது நிச்சயம் பொதுக்கூட்டம் குறித்து இன்று பதிவிட்டுள்ளார். அதில். "ஜனநாயகம் காக்க அணி திரண்டிருக்கும் நம் இந்தியா கூட்டணியின் வெற்றியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினேன்.

அமைச்சர் திரு.@ARROffice, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் @PeterAlphonse7, சட்டமன்ற உறுப்பினர்கள் @shunmugaiah_mla, @mlavilathikulam, @Oorvasi_Amirth, @aloor_ShaNavas, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் @Jeganperiyasami, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.பி.பாலசிங் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in