வைகோவின் கலிங்கப்பட்டி இல்லத்திற்கு சென்ற கனிமொழி, அமைச்சர் சுப்பிரமணியன்!

வைகோவின் கலிங்கப்பட்டி இல்லத்திற்கு சென்ற கனிமொழி, அமைச்சர் சுப்பிரமணியன்!

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு சென்ற குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தனர்.

தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இல்லத்திற்கு திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சென்றனர். அப்போது, அவர்களை வைகோ குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் இருவரும் வைகோவின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக கலிங்கப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்து பேசினார். மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். விழாவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in