இது நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல்... வாக்களித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி!

வாக்களித்தபின் கனிமொழி
வாக்களித்தபின் கனிமொழி

சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் கனிமொழி அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தார். 

நாட்டில் 18 மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விட்ட நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். அவ்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் காலையில் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர். 

அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர். தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

அவ்வகையில் திமுக துணை பொதுச் செயலாலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது தாயார் ராஜாத்தியுடன் மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 8:45 மணி அளவில் வந்தார்.  அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். அப்போது கனிமொழியுடன் வாக்காளர்கள் பலரும் புகைப்படம் எடுத்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர் . அனைவருக்கும் சிரித்தவாறு கனிமொழி ஒத்துழைத்தார்.

பின்னர் அதிகாரிகள் அவரை உள்ளே அழைத்துச் சென்று காத்திருக்க வைத்தனர். காத்திருந்து அவரது முறை வந்ததும் அவர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ”இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே,  அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அந்தத் தெளிவுடன், உணர்வுடன் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதுடன், ”தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்"  என்று சொன்னார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in