ஒரு தலைமுறையின் கல்வியையே தடுக்கப் பார்க்கிறார்கள்... குமுறிய கனிமொழி!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம்

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஒரு தலைமுறைக்கே கல்வி இல்லாத சூழலை உருவாக்க பாஜக நினைப்பதாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக இளைஞரணியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய அவர், “தூத்துக்குடி எனது 2வது தாய்வீடு என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்கள் அன்பை பெற்றவளாக இருக்கிறேன். கொரோனா காலத்திலும், மழை வெள்ள பாதிப்பு வந்தபோதும் உங்களோடு நின்று உங்களோடு பணியாற்றி இருக்கிறேன். பதநீர் கடை வைத்து விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து இவ்வாறு செய்வது பெருமையான செயல்.” என்றார்.

இருசக்கர வாகன பேரணி மூலம் கனிமொழிக்கு வரவேற்பு
இருசக்கர வாகன பேரணி மூலம் கனிமொழிக்கு வரவேற்பு

மேலும், ”திராவிட இயக்கம் நமக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி கொடுத்திருக்கிறது. ஆனால் பாஜக அரசு நமது உரிமைகளை நம்மிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கல்வி உரிமைகளை பறிக்க புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள். நமது குழந்தைகள் காலை பசியோடு இருக்கக் கூடாது என காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் நமது முதல்வர். புதிய கல்விக் கொள்கையால், ஒரு தலைமுறைக்கே உயர் கல்வி இல்லாத சூழ்நிலை உருவாகும். இந்தியாவிலேயே அதிக அளவு பட்டதாரிகள், அதிக அளவு உயர் கல்வி கற்றவர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்” என்றார்.

கனிமொழியை வரவேற்கும் திமுகவினர்
கனிமொழியை வரவேற்கும் திமுகவினர்

தொடர்ந்து பேசிய அவர், “ கல்வியில் பல ஆண்டுகளுக்கு முன்பே சாதித்துக் காட்டியது திராவிட அரசு. நம்மை பழிவாங்க நம் குழந்தைகள் எதிர்காலத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சிக்கு நாம் வாக்களிக்கலாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். நமது பிள்ளைகள் எதிர்காலத்தை அழித்து, மதக்கலவரத்தை தூண்டி ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி பிஜேபி ஆட்சி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்று அவர் பேசினார்

இதையும் வாசிக்கலாமே...   

பிரபுதேவா பாட்டுக்கு நடனமாடி அசத்திய ராஜமெளலி...வைரலாகும் வீடியோ!

வைகோ மருமகன் பாஜகவில் இணைந்தார்... மதிமுகவினர் அதிர்ச்சி!

6 நிமிஷ வீடியோவுக்கு ரூ.60 கோடி செலவு... மாஸ் காட்டும் ‘புஷ்பா2’

அந்தரங்க வீடியோ வெளியாகி அதிர விட்ட நடிகை.... பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு!

குடிபோதையில் ஓட்டுநர்... பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in