கங்கனா ரனாவத் தவளையை போன்றவர்... காங்கிரஸ் வேட்பாளர் கருத்தால் சர்ச்சை!

நடிகை கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத்

”நடிகை கங்கனா ரனாவத் மழைக்காலத்தில் மட்டும் வெளியே வரும் தவளையைப் போன்றவர்” என காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்யா சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மகனும், தற்போதைய அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சருமான விக்ரமாதித்தியா சிங் களமிறக்கப்பட்டுள்ளார்.

விக்ரமாதித்யா சிங், கங்கனா ரனாவத்
விக்ரமாதித்யா சிங், கங்கனா ரனாவத்

தேர்தல் பிரச்சாரம் என்றாலே பரஸ்பரம் வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சிப்பர். அதுவும் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்றால் சிறப்பு கவனம் பெறுவதுடன் சின்னதாய் ஏதாவது சொன்னாலும் அது நாடு முழுவதும் எதிரொலிக்கும். அப்படித்தான் கங்கனா குறித்து விக்ரமாதித்தியா சிங் கூறியுள்ள ஒரு கருத்து தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை கங்கனா குறித்து விக்ரமாதித்தியா சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், “கங்கனா ரனாவத், மழைக்காலத்தில் மட்டும் வெளியே வரும் தவளையைப் போன்றவர் அவர். பிரச்சாரத்துக்கு அவர் அணிந்து செல்லும் ஆடை, படப்பிடிப்புக்கு செல்வது போன்று உள்ளது. இதுபோன்று ஆடை அணிவதால் மக்களின் மனங்களை அவரால் வெல்ல முடியாது.

விக்ரமாதித்யா சிங்
விக்ரமாதித்யா சிங்

அதற்கு மக்களின் வலிகளை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது மாநிலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காக மட்டுமே கங்கனா இங்கு வந்துள்ளார். 3 மாதங்களில் அவர் திரும்பிச் சென்றுவிடுவார்.” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் விக்ரமாதித்யா சிங், கங்கனா ரனாவத்தை தவளையைப் போன்றவர் என கூறியுள்ளது இமாச்சல் அரசியலில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in