காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்: தலைவர்கள் மரியாதை

காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்: தலைவர்கள் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் விழா நடைபெறுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்" என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ""கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in