‘ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியினரே மதிப்பதில்லை..’

‘வாரிசு’ வீடியோ வெளியிட்டு வாரும் பாஜக
ராகுல் காந்தியின் பாதயாத்திரை
ராகுல் காந்தியின் பாதயாத்திரை

ராகுல் காந்தியின் பாதயாத்திரையை இடித்துரைக்கும் காங்கிரஸ் எம்பியின் வீடியோவை வெளியிட்டு, ‘காங்கிரஸ் கட்சியினரே மதிக்காத தலைவரை மற்றவர்கள் எப்படி ஏற்பார்கள்?’ என பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் வாரிசு நகுல் நாத். இவர் மபி சிந்த்வாரா மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்பியாகவும் இருக்கிறார். அண்மையில் இவர் தனது ஆதரவாளர்களுடன் தொகுதி எல்கையில் 7 கிமீ நீளத்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார். அதன் நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நகுல் நாத் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

 நகுல் - கமல்
நகுல் - கமல்

தனது பாதயாத்திரை பிரதாபங்களை தானே மெச்சிக்கொண்ட நகுல் நாத், அதன் உச்சமாக, ‘ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு திரண்ட கூட்டத்தைவிட என்னுடைய பாதயாத்திரையில் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர்’ என சுய தம்பட்டம் அடித்துக்கொண்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் உடனே வைரலானது.

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரான ஷெசாத் பூனாவாலா, அந்த வீடியோவை பகிர்ந்து, ’காங்கிரஸ் தலைவர்களே ராகுல் காந்தியை ஒரு தலைவராக கருதாதபோது, எப்படி கூட்டணி கட்சியினரும், இந்த நாடும் ராகுலை சீரியசாக எதிர்கொள்வார்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சிந்த்வாரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக கமல் நாத்தும், அதே மக்களவை தொகுதியின் உறுப்பினராக நகுல் நாத்தும் உள்ளனர். கரோனா காலத்தின் 2 வருடங்களுக்குப் பின்னரும் தத்தம் தொகுதிகளில் எட்டிப்பார்க்காத தந்தை - மகனை கண்டித்து, அவ்வப்போது ’காணவில்லை’ போஸ்டர்கள் தொகுதிக்குள் முளைக்கும். மக்களின் அந்த அதிருப்தியை கரைக்கவே, நகுல் நாத் பாதயாத்திரை மேற்கொண்டார். ஆனால் தனது தவளை வாயால் தற்போது கெட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in