மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் முகமாக கமல்நாத் இருப்பார்: திக்விஜய் சிங் உறுதி

கமல்நாத் திக்விஜய் சிங்
கமல்நாத் திக்விஜய் சிங்மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் முகமாக கமல்நாத் இருப்பார்
Updated on
1 min read

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முகமாக, அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் இருப்பார் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

மத்திய பிரதேச தேர்தல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், "நாங்கள் மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் தேர்தலில் போட்டியிடுவோம். எனவே, அவர்தான் காங்கிரஸின் முகமாக இருப்பார்" என்று கூறினார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கமல்நாத் போட்டியிட மாட்டார் என்ற வதந்திகள் எழுந்ததால் திக்விஜய் சிங்கின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் 50 துணைத் தலைவர்கள், 105 பொதுச் செயலாளர்கள் மற்றும் 64 மாவட்டத் தலைவர்களை காங்கிரஸ் கட்சி நியமித்தது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர், இதனால் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in