`மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்துங்கள்'- ஆளுநரை எச்சரிக்கும் கமல்ஹாசன்

`மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்துங்கள்'- ஆளுநரை எச்சரிக்கும் கமல்ஹாசன்

மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை என்றும் நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனத்தையும் பதிவு செய்து இருந்தது.

6 பேரின் விடுதலையை தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 6 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை கடுமையாக விமர்சித்து உள்ளார் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருந்தால் அறுவர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும். மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in