‘இயற்கைக்குத் தன்னால் இயன்றதைக் கொடுப்பதே வள்ளல் தன்மை’ - வேள்பாரி நாவலுக்காக சு.வெங்கடேசனைப் பாராட்டிய கமல்!

‘இயற்கைக்குத் தன்னால் இயன்றதைக் கொடுப்பதே வள்ளல் தன்மை’ - வேள்பாரி நாவலுக்காக சு.வெங்கடேசனைப் பாராட்டிய கமல்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய, வேள்பாரி நாவலை விஜய் டி.வியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசினார். புத்தகத்தை பரிந்துரை செய்த கமல்ஹாசனுக்கு சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 6-வது சீசன் 14 வது வாரத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு சீசனின் வார கடைசியில் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களை கமல்ஹாசன் பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில், பிக்பாஸ் 6-வது சீசன் 2022 அக்.9ல் மிக பிரமாண்டாக தொடங்கி, விறுவிறுப்புடன் எப்பிசோடு   நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்ற 21 பேரில் தற்போது வரை 12 பேர் வெளியேறியுள்ளனர். வீட்டில் தற்போது 9 பேர் உள்ளனர். நிகழ்ச்சி இன்று 88 நாட்களை எட்டியுள்ளது. வார கடைசியில் கமல்ஹாசன் பரிந்துரைக்கும் புத்தகங்கள் வரிசையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை கடந்த வார இறுதியில் கமல் பரிந்துரைத்தார்.

“இயற்கைக்குத் தன்னால் இயன்றதைக் கொடுப்பதே வள்ளல் தன்மை. பாரியினுடைய வாழ்க்கையே அதை நினைவுபடுத்துவதாகத்தான் நான் நினைக்கிறேன்" என வேள்பாரி நாவல் குறித்து கமல்ஹாசன் கூறினார். கமலின் பாராட்டுக்கு சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்வின் புத்தகப் பரிந்துரை பகுதியில் திரைக்கலைஞரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வேள்பாரியை பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதனை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள சு. வெங்கடேசன் அவர்களே, உங்கள் தமிழ்த் தொண்டு தொடர வேண்டும். மேலும் நிறைய படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்நோக்குகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ பட பாடல் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் வேள்பாரி நாவல் குறித்து ரஜினிகாந்த்தும், மதுரையில் ‘விருமன்’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும் வேள்பாரி நாவல் பற்றி பேசி இருந்தது யாவரும் அறிந்ததே. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in