ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன்: பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார்.

ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன்: பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார்.

டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியுடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ம் தேதி ராகுல் காந்தியின் தலைமையில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் உள்ளது. 100 நாட்களை தாண்டி நடந்து வரும் இந்த யாத்திரையில், ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று இணைந்துள்ளார். கமல்ஹாசனுடன் அவரது கட்சி நிர்வாகிகளும் தற்போது டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

இன்று யாத்திரையில் கலந்துகொள்வதற்கு முன்பாக கமல்ஹாசன் வெளியிட்ட ட்வீட்டில், “இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல்காந்தி

முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்” என தெரிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in