’நாடாளுமன்றத்தில் கமல் குரல் ஒலிக்குமா?’ பிறந்த நாள் விழாவில் சூசகமாக ஆசையை வெளியிட்ட ஆண்டவர்

பிறந்த நாள் விழாவில் கமல்
பிறந்த நாள் விழாவில் கமல்

‘நாடாளுமன்றத்தில் மக்கள் நீதிமய்யத்தின் குரல் எதிரொலிக்க வேண்டும்’ என்று தனது பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதன் பொருட்டு அவரது அடுத்த திரைப்படமான, இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் ‘தக் லைஃப்’ குறித்தான தகவல்கள் நேற்றே வெளியாகி ரசிகர்களை பரவசம் கொள்ள செய்தனர். இதன் தொடர்ச்சியாக ’மக்கள் நீதி மய்யத்தின்’ தலைவராக, அரசியல் அறிவிப்பு ஒன்றை இன்று கசிய விட்டிருக்கிறார் கமல்.

தக் லைஃப்
தக் லைஃப்

கட்சி சார்பிலான தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், ‘விழா சிறப்பிக்க உழைத்தவர்களுக்கு உருக்கமான நன்றி’களைத் தெரிவித்தார். கூடவே ’இதைவிட 100 மடங்கு உழைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும்’ என்று அடிபோட்டார். அடுத்தபடியாக, எம்பியாகும் தனது ஆவலையும் கமல் வெளியிட்டார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், “ நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் தங்குதடையின்றி எப்போதும் ஒலிக்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும்” என்று பேசினார். கமல்ஹாசனின் இந்தப் பேச்சு, கோவை மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட விரும்புவதை சூசமாக வெளியிப்படுத்தி இருக்கிறது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

திமுக உடன் நெருக்கம் பாராட்டும் கமல்ஹாசன், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு நின்று கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த கமல், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து அங்கே களம் காண விரும்புகிறார். ஆனால், கூட்டணிக்கான ஆயத்தங்கள் எதுவுமே தென்படாத சூழலிலும், கமல் தனது விருப்பத்தை சூசகமாக வெளிப்படுத்தி இருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in