`தேர்தல்கள் முடிந்தன; இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது'

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொங்கிய கமல்ஹாசன்
`தேர்தல்கள் முடிந்தன; இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது'

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவை, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. மற்ற 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த 4 மாநிலங்களிலும் முதல்வர்கள் இன்னும் பதவியேற்கவில்லை. அதற்குள் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்திவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்திருந்தபோது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படவில்லை. தற்போது, கச்சா எண்ணெய் நிலை குறைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இந்த விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே" என்று விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in