நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்... கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்... கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்பவர்களில், குறிப்பிட்ட தேதிகளில் வர முடியாதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரூபாய் 1000 - மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாம்
ரூபாய் 1000 - மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் முகாமை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

இதில் முதற்கட்டமாக 20765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

ரூபாய் 1000 - மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாம்
ரூபாய் 1000 - மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாம்

அதன் பிறகு  5.8.2023 முதல்  16.8.2023 வரை நடைபெற்றன. 2ம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 1.48 கோடி விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.  

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், விடுபட்ட நபர்கள், நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட தேதிகளில் வர முடியாதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள், 3 நாட்கள் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in