மதுரையில் கலைஞர் நூலகம்- எய்ம்ஸ்: சு.வெங்கடேசன் காட்டமான ஒப்பீடு

மதுரையில் கலைஞர் நூலகம்- எய்ம்ஸ்: சு.வெங்கடேசன் காட்டமான ஒப்பீடு

மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றை ஒப்பிட்டு காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.

மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 2,13,288 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் மற்றும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், "அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம். அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ். இரண்டும் மதுரையின் சாட்சிகள்!" என்று விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in