கலைஞர் 100 நிகழ்ச்சி: விஜய்க்கு நேரில் அழைப்பு

கலைஞர் 100 நிகழ்ச்சி: விஜய்க்கு நேரில் அழைப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று விழாவுக்கு வருமாறு விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேபோல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, மிர்ச்சி சிவா, அதர்வா, அதிதி சங்கர் உள்ளிட்டோருக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அனைவரும் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

ஏற்கெனவே நடிகர்கள் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்டவர்களுக்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஏராளமான அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in