ஜோதிராதித்ய சிந்தியா 24 கேரட் துரோகி: கொதிக்கும் ஜெய்ராம் ரமேஷ்!

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவை துரோகி என காங்கிரஸின் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேசத்தில் உள்ள அகர் மால்வாவை அடைந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ இரண்டாம் தலைமுறை காங்கிரஸ் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா மூத்த தலைவரான கமல்நாத்தை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற விரும்பினார். சிந்தியா ஒரு துரோகி, உண்மையான துரோகி, 24 கேரட் துரோகி. கட்சியை விட்டு வெளியேறி கட்சியை அவதூறு செய்தவர்கள் உள்ளனர், அவர்களை திரும்ப கட்சியில் சேர்க்கக்கூடாது. ஆனால் கட்சியில் இருந்து கண்ணியத்துடன் வெளியேறியவர்களும் உள்ளனர். அவர்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை குறித்து கண்ணியமான மௌனம் காத்து வருகின்றனர்" என்று கூறினார்.

ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது விசுவாசிகள் வெளியேறியதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.

ஜெய்ராம் ரமேஷின் விமர்சனம் குறித்து சிந்தியா இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால் இது தொடர்பாக பதிலளித்த மத்திய பிரதேச பாஜக செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், ‘சிந்தியா வலுவான கலாச்சார வேர்களைக் கொண்ட 24 காரட் தேசபக்தர்" என்று அழைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in