ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி: இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து ஜோதிமணி கருத்து

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அதன் நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பைப் போலவே நாட்டிலும் இருவேறு விதமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும்  இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இதை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும்  உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கடுமையாக  விமர்சித்திருக்கிறார். 'உச்சநீதிமன்றத் தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இடஒதுக்கீடு என்பது சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சமவாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது.

சமூக ஒடுக்குமுறையைக்  கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது' என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in