ஜே.பி.நட்டாவிடம் கொடுக்கப்பட்ட சீக்ரெட் ஃபைல்ஸ்!

ஜே.பி.நட்டாவிடம் கொடுக்கப்பட்ட சீக்ரெட்  ஃபைல்ஸ்!

ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கும் தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. இந்த நிலையில், அண்மையில் தமிழகம் வந்திருந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்பான சீக்ரெட் ஃபைல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம். வடக்கே அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி போல, தெற்கே பாஜகவின் கண்ணை உறுத்துவது மு.க.ஸ்டாலினும், சந்திரசேகர் ராவும்தான். எனவே தமிழகத்தில் இன்னும் சில அமைச்சர்களுக்கும் நெருக்கடி கொடுத்து அவர்களையும் விசாரணை வளையத்தில் உட்காரவைக்க திட்டமிடுகிறதாம் பாஜக. இவை அனைத்தும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடக்கவேண்டும் என்றும் பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். அந்த ஆபரேஷனின் தொடக்கம் தான் நட்டாவிடம் கொடுக்கப்பட்ட சீக்ரெட் ஃபைல்ஸ் என்கிறார்கள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in