'திரும்பிப் போ... திரும்பிப் போ' - பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எதிராக கொந்தளித்த மாணவர்கள்!

'திரும்பிப் போ... திரும்பிப் போ' - பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எதிராக கொந்தளித்த மாணவர்கள்!

பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள கல்லூரிக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வந்தபோது, அவருக்கு எதிராக அகில இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.

ஜே.பி. நட்டாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய ஏஐஎஸ்ஏ மாணவர்கள், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவும், பாட்னா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பல்கலைக்கழகத்துக்கு வந்த பாஜக தலைவரை சூழ்ந்துகொண்ட மாணவர்கள் "ஜேபி நட்டா, திரும்பிப் போ" என்று கோஷம் எழுப்பினார்கள். அதன்பின்னர் அவரை பாதுகாப்புப் பணியாளர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர்.

ஜே.பி.நட்டா பாட்னா கல்லூரியில் படித்தவர் மற்றும் அவரது தந்தையும் இதே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர். எனவே கல்லூரியின் கருத்தரங்கு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் வந்தார்.

நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது. ஆளும் மாநிலத்திலேயே பாஜகவின் தேசிய தலைவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in