கிண்டல் பண்ணட்டும், விமர்சனம் பண்ணட்டும்... உணர்ச்சிவசப்பட்ட உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

’’நீட் தேர்வு போராட்டத்தை நான் உணர்வுப்பூர்வமாக பார்க்கிறேன். அதிமுக போல் நிச்சயமாக ஏமாற்ற மாட்டோம். விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்’’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பயிற்சி பெறும் மணிப்பூர் வீரர்களை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘’ மணிப்பூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர்கள் இங்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு நிச்சயம் செய்யும். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை நான் உணர்வுப்பூர்வமாக பார்க்கிறேன். என்ன விமர்சனங்கள் வந்தாலும் 'நீட்'டுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்கள் கலந்துக் கொள்வார்கள். விமர்சனங்கள் குறித்து கவலையில்லை. நீட்டை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

முதலில் மாணவர்களை பலிக் கொடுத்தோம். ஆனால் தற்போது அவர்களது குடும்பத்தையே பலிக் கொடுத்து வருகிறோம். அதனால் கிண்டல் பண்ணட்டும். விமர்சனம் பண்ணட்டும். அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. நாங்கள் உணர்வுப்பூர்வமாக இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

நான் பிரச்சாரத்திற்கு செல்லும் போது அதற்கான உறுதியைக் கொடுத்தேன். அதற்கான முழு முயற்சிகளையும் செய்துக் கொண்டிருக்கிறோம். முழு பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன். அதிமுக போல பொய் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாத்துவது கிடையாது. இந்த போராட்டத்தில் நாங்கள் உணர்வுப்பூர்வமாக கலந்துக் கொள்கிறோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in