இணைந்த கைகள்... மிரண்ட நிர்வாகிகள்!

பேரணியில் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ்
பேரணியில் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ்

குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூக்கும், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக இருக்கும். ஆனால், நேற்று நடைபெற்ற அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு இருவரும் சகஜமாகப் பேசியபடி ஒன்றாக கலந்துகொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனாலும், மனோ தங்கராஜின் ஆதரவாளரான நாகர்கோவில் மேயர் மகேஷ் இந்த நிகழ்வில் மிஸ்ஸிங். ”அண்ணன் அவசர வேலையா சென்னைக்குப் போயிருக்கார்” என்று அவரது ஆதரவாளர்கள் பேசிக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை வைத்து நீண்ட காலத்துக்குப் பிறகு மனோவுக்கும், சுரேஷ்ராஜனுக்கும் இடையே வெகுநேர உரையாடல் நடந்துள்ளது.

மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராக இருக்கும் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மனோ எதிர்ப்பாளர்கள் இதுவரை சுரேஷ்ராஜனின் பின்னால் நின்றார்கள். ஆனால் இப்போது, எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒன்றாக நெருங்கிவிட்டதால் மனோ எதிர்ப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். அதேபோல், சுரேஷ்ராஜனை போட்டுக்கொடுத்து அவரது பதவியை பிடித்த குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேயருமான மகேஷுக்கும் இந்த விவகாரம் அடிவயிற்றைக் கலக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in