மக்களவைத் தேர்தலில் ஜான் பாண்டியன் மகள் போட்டி: தாமரையா, இரட்டை இலையா என குழப்பம்!

மகளுடன் ஜான் பாண்டியன்
மகளுடன் ஜான் பாண்டியன்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

தந்தையுடன் வினோலின் நிவேதா
தந்தையுடன் வினோலின் நிவேதா

ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது தந்தை ஜான் பாண்டியனின் அரசியல் பணிகளால்  ஈடுபாடு கொண்டு இப்போது கட்சிப் பணிகளில் தலைகாட்டுகிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவர் ஆர்வமாக உள்ளார்.

தனது தந்தையும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் முடிவு செய்து வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ஜான் பாண்டியனை பொறுத்தவரை வரும் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.  பாஜக - அதிமுக கூட்டணி இருந்தவரை அந்தக் கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

தற்போது அதிமுகவும், பாஜகவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருப்பதால் எந்த பக்கம் செல்வது என்று இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறார். இந்நிலையில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து அண்மையில் வாக்கெடுப்பு நடத்தினார்.

கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு
கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு

அதிமுக, பாஜக ஆகிய இரு தரப்பும் ஜான் பாண்டியனை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கட்சி நிர்வாகிகளிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே ஜெயலலிதா தான் தனக்கு அரசியலில் ரோல் மாடல் என்றும், அவரைப் போன்று துணிச்சலாக இருக்க வேண்டும் என தாம் எண்ணுவதாக டாக்டர் வினோலின் நிவேதா கூறியுள்ளார்.

இதன் மூலம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர் ஆர்வமாக இருப்பதால், ஜான் பாண்டியன் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  அல்லது பாஜகவின் பெரும் முயற்சிக்கு பிறகு அவர் அந்தக் கூட்டணியில் இணைந்து மகளை  தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்தாலும் வைக்கலாம் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in