`கடினமான இந்த நேரத்தில் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடியை ஆறுதல் படுத்தும் ஜோ பைடன்

`கடினமான இந்த நேரத்தில் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடியை ஆறுதல் படுத்தும் ஜோ பைடன்

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100-வது வயதில் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமரின் தாயார் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவிற்கு நானும் என்னுடைய மனைவியும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். கடினமான இந்த நேரத்தில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். மேலும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இரவு உள்ளிட்ட உலகத் தலைவர்களும் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in