ஜோ பைடன்
ஜோ பைடன்

டிரம்ப் அதிபரானால் ஜனநாயகத்துக்கு ஆபத்து... எச்சரிக்கிறார் ஜோ பைடன்!

டிரம்ப்  அமெரிக்கா அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள்
அமெரிக்க மக்கள்

தற்போது அமெரிக்க  அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதனால்  அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் பைடனும், குடியரசுக் கட்சியின் சார்பாகத் டிரம்ப்பும் போட்டியிடுவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருவருக்கும் இடையே கடுமையாக போட்டி நிலவும் என கூறப்படும் நிலையில் இருவரும் தற்போதிருந்தே தங்களுக்கான ஆதரவைத்தேடி பிரச்சாரம் செய்து வருகின்றனர். பல்வேறு மாகாணங்களிலும் இருவரும் பயணம் செய்து ஆதரவு சேகரித்து வருகின்றனர்.

டிரம்ப்
டிரம்ப்

நேற்று தனது ஆதரவாளர்களை சந்தித்த ஜோ பைடன், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.  "வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் அமெரிக்காவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடத்தப்படும் யுத்தம். டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிவருகிறார்.  டிரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்" என்று ஜோ பைடன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in